Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

தமிழகத் தேர்தலில் விஜய் அமோக வெற்றி: நாமல் ராஜபக்ஷ வாழ்த்து!
Sri Lanka

தமிழகத் தேர்தலில் விஜய் அமோக வெற்றி: நாமல் ராஜபக்ஷ வாழ்த்து!

By MadushanMay 5, 2026

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், பிரபல நடிகருமான விஜய்க்கு, இலங்கையின் முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' (X) தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நடிகரும் அரசியல் தலைவருமான ஜோசப் விஜய் சந்திரசேகருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், விஜய்க்கான உண்மையான மக்கள் பணி இப்போதுதான் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, வரவிருக்கும் சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு, மக்களுக்குத் தேவையான பயனுள்ள திட்டங்களைச் கொண்டு சேர்க்க விஜய்க்கும் அவரது குழுவினருக்கும் மனவலிமை கிடைக்க வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இரு நாட்டு மக்களையும் பாதிக்கும் பல்வேறு முக்கிய விவகாரங்களில், இலங்கையுடன் வலுவான மற்றும் ஆக்கப்பூர்வமான உறவை வளர்த்தெடுக்க விஜய்யின் புதிய தலைமை வழிவகுக்கும் என தான் நம்புவதாகவும் நாமல் ராஜபக்ஷ தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அண்டை நாடான இலங்கையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio