Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

நேபாளம் - ஓமன் ஒருநாள் போட்டி: ஆரிஃப் ஷேய்க் அதிரடி ஆட்டம்; சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்
Sports

நேபாளம் - ஓமன் ஒருநாள் போட்டி: ஆரிஃப் ஷேய்க் அதிரடி ஆட்டம்; சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்

By MadushanMay 5, 2026

நேபாளம் மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது கிர்ட்டிபூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நேபாள அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்து களமிறங்கியது. எனினும், ஆரம்பமே அந்த அணிக்கு அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க வீரராக களம் கண்ட பினோத் பந்தாரி, எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஓட்டங்கள் ஏதுமின்றி 'டக்அவுட்' ஆகி வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த அர்ஜுன் குமல் மற்றும் ஆரிஃப் ஷேய்க் நிதானமாகவும் அதேவேளை பொறுப்பாகவும் ஆடி அணியை மீட்டெடுத்தனர். அர்ஜுன் குமல் ஒருபுறம் விக்கெட் விழாமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் ஆரிஃப் ஷேய்க் ஓமன் அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்தார். 87 பந்துகளைச் சந்தித்த அர்ஜுன் குமல், 4 பவுண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

அர்ஜுன் வெளியேறிய பின் களம் புகுந்த நட்சத்திர வீரர் ரோஹித் பௌதல் 9 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்து வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் அபாரமாக ஆடிய ஆரிஃப் ஷேய்க் சதத்தை நோக்கி முன்னேறினார். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்த அவர், 5 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்கள் எடுத்திருந்த போது துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். வெறும் 6 ஓட்டங்களில் தனது சதத்தைத் தவறவிட்ட போதிலும், இவரது அதிரடி ஆட்டம் நேபாள அணி ஒரு கௌரவமான நிலையை எட்ட முக்கிய காரணமாக அமைந்தது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio