
ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு: கேப்டனாக சுப்மன் கில் நியமனம்!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டனாக சுப்மன் கில்; புதிய துணை கேப்டன்கள் நியமனம்
இந்தத் தொடரின் மாபெரும் திருப்பமாக, டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரு வடிவங்களுக்கும் இந்திய அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், டெஸ்ட் அணிக்கான துணை கேப்டனாக வீரர் கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிக்கான துணை கேப்டன் பதவியிலிருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர் புதிய துணை கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி
இந்திய டெஸ்ட் அணியில் சீனியர் மற்றும் இளம் வீரர்களின் கலவையாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே போன்ற உள்நாட்டுப் போட்டிகளில் அசத்திய வீரர்களுக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் அணி விவரம்:
சுப்மன் கில் (கேப்டன்)
கே.எல். ராகுல் (துணை கேப்டன்)
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சாய் சுதர்சன்
தேவ்தத் படிக்கல்
ரிஷப் பண்ட்
துருவ் ஜூரல்
நிதீஷ் குமார் ரெட்டி
வாஷிங்டன் சுந்தர்
மானவ் சுதார்
குல்தீப் யாதவ்
முகமது சிராஜ்
பிரசித் கிருஷ்ணா
குர்னூர் பிரார்
ஹர்ஷ் துபே
ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய ஒருநாள் அணி
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒருநாள் அணி விவரம்:
சுப்மன் கில் (கேப்டன்)
ஷ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன்)
ரோஹித் சர்மா
விராட் கோலி
கே.எல். ராகுல்
இஷான் கிஷன்
ஹர்திக் பாண்டியா
நிதீஷ் குமார் ரெட்டி
வாஷிங்டன் சுந்தர்
குல்தீப் யாதவ்
அர்ஷ்தீப் சிங்
பிரசித் கிருஷ்ணா
குர்னூர் பிரார்
ஹர்ஷ் துபே
பிரின்ஸ் யாதவ்
