Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம் – முதல்வர் விஜய்
Sri Lanka

முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம் – முதல்வர் விஜய்

By MadushanMay 18, 2026

முள்ளிவாய்க்கால் நினைவை என்றும் நெஞ்சில் ஏந்துவோம் எனவும், கடல் கடந்து வாழும் உலகத் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காகத் தங்களின் தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் துணை நிற்கும் எனவும் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கை, உலகத் தமிழர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், ஈழத் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணில் எதிர்கொண்ட துயரங்களும், இழந்த உயிர்களின் தியாகங்களும் வரலாற்றில் என்றும் மறக்க முடியாதவை என்று குறிப்பிட்டுள்ளார். முள்ளிவாய்க்காலில் துடிதுடிக்க மடிந்த லட்சக்கணக்கான தமிழர்களின் நினைவுகள் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத வடுவாக நிலைத்திருக்கிறது என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களின் உணர்வுகளுடன் தாம் எப்போதும் இணைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள தவெக தலைவர் விஜய், ஈழத் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திற்கும், அவர்களின் வாழ்வுரிமைக்கும் தமிழக வெற்றிக் கழகம் என்றும் குரல் கொடுக்கும் என உறுதியளித்துள்ளார். தாயகத்திலும் உலக நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் காக்கப்பட தங்களின் ஆதரவு என்றும் தொடரும் என்றும் அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio