Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
Entertainment

’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

By MadushanMay 6, 2026

திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக ‘தாய் கிழவி’ பட புகழ் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ‘சேயோன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், படத்தின் நாயகி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இது குறித்த பல்வேறு தகவல்கள் கசிந்த நிலையில், இன்று பாக்யஸ்ரீ போஸின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த நாயகி குறித்த விவாதங்களுக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மேலும், ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் பால சரவணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அக்டோபர் மாதம் படத்தை வெளியிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக படத்தின் அறிமுக வீடியோவில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio