Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

நடிகை ஸ்ரீலீலா - கிரிக்கெட் வீரர் திலக் வர்மா காதல் வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த தாய் சுவர்ணலதா!
Entertainment

நடிகை ஸ்ரீலீலா - கிரிக்கெட் வீரர் திலக் வர்மா காதல் வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த தாய் சுவர்ணலதா!

By MadushanMay 19, 2026

திரையுலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகையான ஸ்ரீலீலா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் திலக் வர்மா ஆகிய இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவலாக செய்திகள் வெளியாகி வந்தன. ரசிகர்களிடையேயும், ஊடகங்களிலும் இந்த விவகாரம் பெரும் விவாதப் பொருளாக மாறியிருந்த நிலையில், தற்போது இந்த வதந்திகளுக்கு நடிகை ஸ்ரீலீலாவின் தாயார் டாக்டர் சுவர்ணலதா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த காதல் வதந்திகள் உருவாவதற்கு கடந்த ஆண்டு நடந்த சில சம்பவங்களே முக்கியக் காரணமாக அமைந்தன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகை ஸ்ரீலீலா தனது தாயாருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றிருந்தார். அதே நாளில், இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவும் தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோயிலுக்கு வந்திருந்தார். தற்செயலாக ஒரே நேரத்தில் இருவரும் அங்கு காணப்பட்டதை அடுத்து, இருவரையும் இணைத்து முதன்முதலில் செய்திகள் வெளியாகத் தொடங்கின.

அதனைத் தொடர்ந்து, தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் ஸ்ரீலீலாவின் தாயார் சுவர்ணலதா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. மேலும், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியின் போது, திலக் வர்மாவின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்திருந்த ஒரு நபருடன் ஸ்ரீலீலா இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. இந்த அடுத்தடுத்த சம்பவங்களை கோர்த்து, இருவரும் தீவிரமாகக் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வதந்திகளைப் பரப்பத் தொடங்கினர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகை ஸ்ரீலீலாவின் தாயார் டாக்டர் சுவர்ணலதா தனது விளக்கத்தை அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சமூக வலைதளங்களில் எங்கள் குடும்பத்தைப் பற்றி பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை. இதுபோன்ற கற்பனையான கதைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்றே எனக்குப் புரியவில்லை. இந்தச் செய்திகளில் எள்ளளவும் உண்மையில்லை, இவை அனைத்தும் வெறும் கற்பனையே” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஸ்ரீலீலா - திலக் வர்மா காதல் விவகாரம் வெறும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio