Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

ஐபிஎல் 2026: மிட்செல் மார்ஷின் அதிரடி சதத்தால் லக்னோ திரில் வெற்றி - பெங்களூரு அணி போராடித் தோல்வி!
Sports

ஐபிஎல் 2026: மிட்செல் மார்ஷின் அதிரடி சதத்தால் லக்னோ திரில் வெற்றி - பெங்களூரு அணி போராடித் தோல்வி!

By MadushanMay 8, 2026

ஐபிஎல் தொடரின் நேற்றைய விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடி 209 ஓட்டங்களைக் குவித்தது. லக்னோ அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கிய மிட்செல் மார்ஷ், பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 56 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்கள் உட்பட 111 ஓட்டங்களை விளாசி அவர் அசத்தினார்.

போட்டியின் நடுவே மூன்று முறை மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 19 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி பெங்களூரு அணியின் வெற்றிக்கு 213 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மழையின் காரணமாக ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக மாறிய நிலையில், பெங்களூரு அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் விளையாடி 61 ஓட்டங்களைச் சேர்த்து அணியை மீட்டெடுக்க முயன்றார்.

இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 40 ஓட்டங்களைக் குவித்து வெற்றிக்காகப் போராடினார். இருப்பினும், 19 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணியால் 203 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷின் அபார சதம் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio