Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

இலங்கை - மாலைதீவு இடையில் 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: இருதரப்பு உறவுகளில் புதிய மைல்கல்
Sri Lanka

இலங்கை - மாலைதீவு இடையில் 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: இருதரப்பு உறவுகளில் புதிய மைல்கல்

By MadushanMay 4, 2026

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஏழு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கைச்சாத்திடப்பட்டுள்ளன. கொழும்பில் நடைபெற்ற இந்த உயர்மட்ட அரச தலைவர்கள் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தச் சந்திப்பின் முக்கிய அங்கமாக சுற்றுலாத்துறை, கல்வி மற்றும் உயர்கல்வி, சுகாதாரத் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் அபிவிருத்தி, ஆவணக்காப்பகம் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 07 துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உடன்படிக்கைகள் எட்டப்பட்டன. குறிப்பாக, பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியான பிணைப்புகளை வலுப்படுத்துவதில் இரு தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் நோக்கில் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை இரு நாடுகளுக்கும் இடையே அதிகரிப்பதற்கும் இந்த இணக்கப்பாடுகள் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலைதீவு ஜனாதிபதியின் இந்த விஜயம், தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையின் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio