Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

மாணவர்களின் ரூ.76 கோடி கல்விக் கடனை அடைத்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்!
World

மாணவர்களின் ரூ.76 கோடி கல்விக் கடனை அடைத்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்!

By MadushanMay 12, 2026

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம், ராலீ நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற வில்சன் காலேஜ் ஆப் டெக்ஸ்டைல்ஸ் கல்லூரியில் ஜவுளித் துறை சார்ந்த உயர்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா கடந்த 8-ம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் 176 இளநிலை பட்டதாரிகளும், 26 முதுநிலை பட்டதாரிகளும் என மொத்தம் 202 பேர் தங்களது பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அனில் கோச்சார் கலந்து கொண்டார்.

விழாவில் உரையாற்றிய அனில் கோச்சார், அங்குப் பட்டம் பெற்ற 202 மாணவ, மாணவியரின் கல்விக்கடன் முழுவதையும் தானே ஏற்பதாக அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். சுமார் 76.18 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக் கடனை அவர் உடனடியாக அடைப்பதற்கான தொகையையும் வழங்கினார். இந்த அறிவிப்பைக் கேட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ஒரு தொழிலதிபரின் இந்த மனிதாபிமானச் செயல் அந்த அரங்கையே நெகிழ்ச்சியில் நனையச் செய்தது.

தனது இந்த பெருந்தன்மையான முடிவு குறித்து அனில் கோச்சார் பேசுகையில், தனது தந்தை பிரகாஷ் கோச்சாரின் நினைவாகவே இதனைச் செய்ததாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த தனது தந்தைக்கு, இந்த வில்சன் காலேஜ் ஆப் டெக்ஸ்டைல்ஸ் கல்லூரிதான் வாழ்வாதாரத்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டதாக அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். 1950-களில் இதே கல்லூரியில் பட்டம் பெற்ற அவரது தந்தை, ஜவுளித் துறையில் பெரும் தொழிலதிபராக உயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தக் கல்லூரிக்கு நானும் எனது குடும்பமும் எப்போதும் கடன்பட்டிருக்கிறோம். இங்கிருந்து பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள் எவ்வித கடன் சுமையுமின்றி, சுதந்திரப் பறவைகளாகத் தங்களது வாழ்வைத் தொடங்க வேண்டும் என்பதே எங்கள் குடும்பத்தின் விருப்பம். இன்று என் தந்தை உயிருடன் இல்லை என்றாலும், அவரது நினைவைப் போற்றும் வகையில் இந்த உதவியைச் செய்கிறேன்," என்று உருக்கமாகத் தெரிவித்தார். அனில் கோச்சாரின் இந்த மகத்தான செயலுக்கு மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களும் இவரது செயலைப் பாராட்டிச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

Boom Tamil
Live NowBoom Tamil Radio