
பாலியல் வன்கொடுமை வழக்கில் Norway இளவரசியின் மகனுக்கு சிறைத்தண்டனை: Oslo நீதிமன்றம் தீர்ப்பு
Norway பட்டத்து இளவரசி Mette-Marit-இன் மூத்த மகனான Marius Borg Høiby என்பவருக்கு, பாலியல் வன்கொடுமை வழக்கில் நான்காண்டுகளும் ஐந்து மாதங்களும் சிறைத்தண்டனை விதித்து Oslo மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு Norway அரச குடும்பத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மதுபோதையில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணின் நிலையைத் தவறாகப் பயன்படுத்தி பாலியல் உறவு கொண்ட குற்றச்சாட்டு மற்றும் மற்றொரு நபரைத் தாக்கிய குற்றச்சாட்டு ஆகியவை Marius மீது நிரூபிக்கப்பட்டுள்ளன. எனினும், அவர் மீதான மற்றொரு பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Marius Borg Høiby, பட்டத்து இளவரசர் Haakon-ஐ திருமணம் செய்வதற்கு முன்பு இளவரசி Mette-Marit-க்கு பிறந்த மகன் ஆவார். இவருக்கு அரச குடும்ப பட்டங்கள் ஏதும் இல்லை என்பதுடன், Norway-யின் அரியணைக்கான வாரிசுப் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெறவில்லை. இருப்பினும், அரச குடும்பத்துடனான தொடர்பு காரணமாக இந்த வழக்கு தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றது.
சிறைத் தண்டனையுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 200,000 Norway குரோனரை (இந்திய மதிப்பில் சுமார் 15.6 லட்சம் ரூபாய்) இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்யப்படும் என Marius-இன் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்க Norway அரச மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. இது ஒரு தனிப்பட்ட விஷயம் என அது குறிப்பிட்டுள்ளது. இருந்தபோதிலும், இந்த நிகழ்வு Norway அரச குடும்பத்தின் நற்பெயருக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
