Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

Toronto: Don Valley Parkway நெடுஞ்சாலையில் தொடர் விபத்துகள்; காலை நேரப் போக்குவரத்து முடங்கியது
Canada

Toronto: Don Valley Parkway நெடுஞ்சாலையில் தொடர் விபத்துகள்; காலை நேரப் போக்குவரத்து முடங்கியது

By MadushanJune 16, 2026

Torontoவின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான Don Valley Parkway (DVP)யில் இன்று காலை நிகழ்ந்த தொடர் விபத்துக்களால், உச்சகட்ட நேரப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலையின் வடக்கு மற்றும் தெற்கு வழித்தடங்கள் ஸ்தம்பிதமடைந்தன.

முதலில், Dundas Street அருகே வடக்கு நோக்கிய வழித்தடத்தில் GO பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. விபத்து நேரிட்டபோது பேருந்தில் பயணிகள் இருந்தபோதிலும், நல்ல வேளையாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேநேரம், தெற்கு நோக்கிய வழித்தடத்தில் நிகழ்ந்த மற்றொரு விபத்து, அவ் வழித்தடத்திலான போக்குவரத்தை முற்றிலுமாக முடக்கியது. இந்த விபத்து தொடர்பாக, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர், காலை 10 மணியளவில் விபத்துக்குள்ளான வாகனங்கள் அகற்றப்பட்டு, சம்பவ இடங்கள் சீரமைக்கப்பட்டதை அடுத்து, நெடுஞ்சாலையில் போக்குவரத்து படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பியது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio